New Updates! Fresh news just arrived.

டிட்வா அனர்த்தத்திலிருந்து மீண்ட குடும்பத்துடன் புத்தாண்ட...

News

டிட்வா அனர்த்தத்திலிருந்து மீண்ட குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய ஜனாதிபதியி அநுர

April 14, 2026 1:38 pm
டிட்வா அனர்த்தத்திலிருந்து மீண்ட குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாடிய ஜனாதிபதியி அநுர
டிட்வா சூறாவளியினால் சேதமடைந்த அநுராதபுரம் – கல்நேவ பகுதியைச் சேர்ந்த இந்திரஜித் சம்பத் சேனாரத்னவின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட இல்லத்தில் இன்று (14) நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஜனாதிபதி கலந்து கொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு சுபநேரச் சடங்குகள் இன்று (14) காலை நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டன.

கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட டிட்வா அனர்த்தத்தினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு வழங்கப்பட்ட இழப்பீட்டின் கீழ், ஐந்து மாத காலப்பகுதிக்குள் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

கல்நேவ பிரதேச செயலாளர் பிரிவில் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்காக நிர்மாணிக்கப்படும் ஆறு புதிய வீடுகளில் இதுவும் ஒன்றாகும். அத்துடன், இப்பிரதேச செயலாளர் பிரிவில் பகுதியளவில் சேதமடைந்த 66 வீடுகளுக்கான இழப்பீடுகளும் தற்போது வழங்கி முடிக்கப்பட்டுள்ளன.

இந்தப் பணிகளை விரைவுபடுத்தி, அனைத்து இலங்கை மக்களுக்கும் மகிழ்ச்சியான தருணமான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டத்தின் மகிழ்ச்சியை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் பெற்றுக்கொடுக்க முடிந்ததையிட்டு மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், பல்வேறு சவால்களுக்கு பின்னரும் ஏற்பட்ட உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியிலும் தோல்வியை ஏற்றுக்கொள்ளாது மீண்டும் எழுந்து நிற்கும் இலங்கை மக்களுடன் ஒரே சுபநேரத்தில் ஒன்றிணையக் கிடைத்தமை பெரும் மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now