இந்தியா புறப்பட்டார் ஜனாதிபதி; 19 ஆம் திகதி விசேட உரை! - ...
News
இந்தியா புறப்பட்டார் ஜனாதிபதி; 19 ஆம் திகதி விசேட உரை!
இந்தியாவின் புதுடில்லியில் நடைபெறவுள்ள 'AI Impact - 2026' உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க முன்னர் நாட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார்.
ஜனாதிபதி உள்ளிட்ட இலங்கைத் தூதுக்குழுவினர், இன்று (17) பிற்பகல் 02:05 மணியளவில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான UL-195 என்ற விமானம் மூலம் இந்தியாவின் புதுடெல்லி நோக்கிப் புறப்பட்டனர்.
ஐந்து நாட்கள் நடைபெறவுள்ள இந்த உச்சிமாநாட்டை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளதுடன், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 19 ஆம் திகதி விசேட உரையாற்றவுள்ளார்.
செயற்கை நுண்ணறிவை (AI) கட்டுப்படுத்துதல் மற்றும் அதன் ஒத்துழைப்பிற்கான "பொதுவான உலகளாவிய வீதி வரைபடத்தை பிரகடனப்படுத்துவதே இந்த மாநாட்டின் பிரதான நோக்கமாகும்.
இந்த உச்சிமாநாடு இந்த மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதுடன், இதில் பல நாடுகளின் உயர்மட்டத் தலைவர்கள் பங்கேற்கவுள்ளனர்.
பிரேசில் ஜனாதிபதி லூலா டா சில்வா, பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தின் அபுதாபி இளவரசர் உட்பட 20 நாடுகளின் தலைவர்களும், 45 இற்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்களும் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
அத்துடன், ஐக்கிய நாடுகளின் பொதுச் செயலாளர் உள்ளிட்ட சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.