New Updates! Fresh news just arrived.

செப்டம்பர் 5 முதல் நாடு முழுவதும் ஜனாதிபதி தலைமையில் மக்க...

News

செப்டம்பர் 5 முதல் நாடு முழுவதும் ஜனாதிபதி தலைமையில் மக்கள் பேரணிகள்!

August 23, 2026 8:28 am
செப்டம்பர் 5 முதல் நாடு முழுவதும் ஜனாதிபதி தலைமையில் மக்கள் பேரணிகள்!
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி முதல் அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய மக்கள் பேரணிகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதனுடன் இணைந்து, கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் கோட்டச் சபைகளை மீளமைக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

களுத்துறை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் மத்தியில் எதிர்ப்புணர்வு காணப்படுவதாக எதிர்க்கட்சிகள் கூறினால், அதனை மக்கள் ஆதரவுடன் வெளிப்படுத்துமாறு அவர் சவால் விடுத்தார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி கிராம மற்றும் கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டங்களில் தனது அமைப்புகளை வலுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

செப்டம்பர் 5ஆம் திகதி முதல் ஜனாதிபதியின் தலைமையில் மாவட்ட மட்டத்தில் பெரியளவிலான மக்கள் சந்திப்புகள் நடைபெறவுள்ளதாகவும், இதன் மூலம் அரசாங்கத்தின் செயற்பாடுகள் மற்றும் மக்களின் ஆதரவு தொடர்பில் நேரடியாக மக்களுடன் கலந்துரையாடுவதற்கான வாய்ப்பு ஏற்படும் என்றும் அவர் கூறினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now