New Updates! Fresh news just arrived.

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

News

அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!

September 21, 2026 8:09 pm
அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த ஜனாதிபதி!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் இலங்கையரான சிவராசா அனோஜனினுடைய பெற்றோரை, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (21) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நேரில் சந்தித்துள்ளார்.

சிவராசா அனோஜனுக்கு பொதுமன்னிப்பு பெற்றுக்கொள்வதற்காக அரசாங்கமானது இயன்றளவு முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாக ஜனாதிபதி இதன்போது உறுதியளித்துள்ளார்.

அதற்காக சட்ட ரீதியாகவும் இராஜதந்திர மட்டத்திலும் இலங்கை அரசாங்கமானது தலையீடு செய்யும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, சவூதி மன்னரிடம் இது தொடர்பிலான பொதுமன்னிப்பு வழங்குமாறு இராஜதந்திர மட்டத்தில் எழுத்துமூல கோரிக்கையினை விடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதினையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேன்முறையீடுகளினை சமர்ப்பித்தல் உள்ளிட்ட வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஊடாக இதுவரை உத்தியோகபூர்வமாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் இங்கு அவரின் பெற்றோருக்குத் தெரிவித்ததோடு, குறித்த நடவடிக்கைகள் தொடர்ச்சியாகவும், உன்னிப்பாகவும் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் ஜனாதிபதி இதன்போது தெரிவித்துள்ளார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now