New Updates! Fresh news just arrived.

பொதுமக்களுக்கான விசேட சலுகைத் திட்டத்தினை சமர்ப்பிக்கவுள்...

News

பொதுமக்களுக்கான விசேட சலுகைத் திட்டத்தினை சமர்ப்பிக்கவுள்ள ஜனாதிபதி!

April 7, 2026 11:32 am
பொதுமக்களுக்கான விசேட சலுகைத் திட்டத்தினை சமர்ப்பிக்கவுள்ள ஜனாதிபதி!
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இன்று (07) பாராளுமன்றத்தில் பொதுமக்களுக்கான விசேட சலுகைத் திட்டமொன்றை சமர்ப்பிக்கவுள்ளதாக சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க அறிவித்துள்ளார்.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இந்த விசேட திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

புத்தாண்டு காலத்தை முன்னிட்டு மக்களுக்குப் புதிய சலுகைகளை அறிமுகப்படுத்துமாறு எதிர்க்கட்சியின் முதற்கோலாளர் கயந்த கருணாதிலக்க விடுத்த கோரிக்கைக்குப் பதிலளிக்கும்போதே சபை முதல்வர் இதனைத் தெரிவித்தார்.

இன்றைய பாராளுமன்ற அமர்வின்போது ஜனாதிபதியினால் இந்தத் திட்டம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது. பொருளாதார நெருக்கடியால் அவதியுறும் சாமானிய மக்களுக்கு இந்த நிவாரணப் பொதி ஒரு பெரும் ஆறுதலாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now