மின் பாவனை குறித்து நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அவசர வேண்ட...
News
மின் பாவனை குறித்து நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி அவசர வேண்டுகோள்
மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள வலுசக்தி விநியோகச் சவால்களை எதிர்கொள்ளும் வகையில், இலங்கையின் வலுசக்தி பாதுகாப்பை உறுதிப்படுத்த மக்கள் மற்றும் அதிகாரிகள் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.
வலுசக்தி பாதுகாப்பைப் பேணுவது குறித்து இன்று (23) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயங்களைக் குறிப்பிட்டார்.
நாட்டின் மின் நுகர்வு உச்சத்தில் இருக்கும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையிலான காலப்பகுதியில், மின்சாரத்தை மிகவும் பொறுப்புடன் பயன்படுத்துவது குறித்து மக்களுக்குத் தெளிவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
அத்துடன், விளம்பரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் மின்சாரப் பெயர்ப்பலகைகள் மற்றும் அலங்கார மின் கட்டமைப்புகளின் பயன்பாட்டைக் குறைப்பதன் மூலம் குறிப்பிடத்தக்க அளவு மின்சாரத்தைச் சேமிக்க முடியும் என இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.
மேலும் வீதி விளநகர்ப்புறங்களில் தேவையற்ற வீதி விளக்குகளின் பயன்பாட்டைக் குறைத்தல் மற்றும் போக்குவரத்து அமைச்சின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துதல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இதனிடையே அரச மற்றும் உள்ளூராட்சி மன்ற மட்டத்தில் வலுசக்தி நுகர்வை முறையான முகாமைத்துவத்திற்கு உட்படுத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
தற்போதைய இக்கட்டான சூழலில், வலுசக்தியைச் சரியான முறையில் கையாள்வது ஒவ்வொரு தனிநபரினதும் மற்றும் நிறுவனங்களினதும் பொறுப்பாகும் என ஜனாதிபதி இதன்போது நினைவூட்டினார்.
இந்தக் கலந்துரையாடலில் வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி உள்ளிட்ட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.