அனோஜன் தொடர்பில் சவூதி நீதிமன்றின் தீர்மானத்தினை வரவேற்ற ...
News
அனோஜன் தொடர்பில் சவூதி நீதிமன்றின் தீர்மானத்தினை வரவேற்ற ஜனாதிபதி!
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த அனோஜன் சிவராசாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நீக்குவதற்கு அந்நாட்டினுடைய உயர் நீதிமன்றம் எடுத்த தீர்மானத்தினை பெரிதும் பாராட்டுவதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
சவூதி உயர் நீதிமன்றம் எடுத்த குறித்த தீர்மானத்தைப் பாராட்டி, ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ 'X' சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவொன்றினை மேற்கொண்டு இதனைத் தெரிவித்துள்ளார்.
குறித்த தீர்மானம் அனோஜனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் இது தொடர்பில் அவதானத்துடன் இருந்த அனைத்து இலங்கை மக்களுக்கும் பெரும் ஆறுதலையும் நிவாரணத்தினையும் அளிப்பதாக ஜனாதிபதி அதில் குறிப்பிட்டுள்ளார்.
நட்புறவு நாட்டின் சட்ட நடைமுறைகளுக்கு மதிப்பளித்து மேற்கொள்ளப்பட்ட பொறுமையான இராஜதந்திர தலையீடுகள் மற்றும் வெளிநாட்டிலுள்ள ஓர் இலங்கையருக்காகத் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்த அனைத்துத் தரப்பினரின் தளராத முயற்சியினாலேயே குறித்த நல்முடிவைப் பெற முடிந்தது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்காக ஒத்துழைப்பு வழங்கிய சவூதி அரேபிய அரசுக்கு சிறப்பு நன்றியினை தெரிவிப்பதுடன், குறித்த சட்டப் பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்ட இரு நாடுகளின் இராஜதந்திரிகள், அரச அதிகாரிகள் மற்றும் சட்டக் குழுக்களுக்கும் இலங்கை அரசினுடைய பாராட்டுக்கள் உரித்தாவதாக ஜனாதிபதி தனது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அனோஜனுக்கு எதிரான ஏனைய சட்ட நடைமுறைகள் நிறைவடையும் வரைக்கும் அவருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் தேவையான அனைத்து உதவிகளினையும் தொடர்ந்து வழங்க அரசு தயாராகவுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், சிறந்த வாழ்வாதாரத்தினை தேடி வெளிநாடு செல்லும் எந்தவொரு இலங்கையரும் தாம் தனித்துவிடப்பட்டுள்ளோம் எனும் உணர்வைப் பெறக்கூடாது என்வும் குறித்த பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.