New Updates! Fresh news just arrived.

பிரமாணக் குறிப்புக்கு முரணான அதிபர் நியமனம்: இலங்கை ஆசிரி...

News

பிரமாணக் குறிப்புக்கு முரணான அதிபர் நியமனம்: இலங்கை ஆசிரியர் சங்கம்!

September 23, 2026 4:30 pm
பிரமாணக் குறிப்புக்கு முரணான அதிபர் நியமனம்: இலங்கை ஆசிரியர் சங்கம்!
2023 டிசம்பர் முதல் வழங்கப்பட்டுள்ள அதிபர் நியமணத்தில் அரசியல் அழுத்ததத்தின் காரணமாகவும் பாராபட்சத்தினாலும் அதிபர் சேவை பிரமாணக் குறிப்புக்கு முரணாக அதிபர் நியமனங்களானது வழங்கப்பட்டுள்ளதினால் இன்றுவரை கடமையேற்க முடியாமல் பல அதிபர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண ஆளுநரிற்கு கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தினரினுடைய குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தரம் 3 அதிபர் சேவைக்கு புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கு, வடக்கு மாகாணப் பாடசாலைகளுக்கு 2023.12.15 ஆம் திகதி தொடக்கம் பல்வேறு திகதிகளில் இடநிலைப்படுத்தல் கடிதங்களானது வழங்கப்பட்டிருந்தன.

அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் பிரிவு 11 (பதவிகளுக்கு நியமித்தல்) இன் உப பிரிவு 3 இல் குறிப்பிட்டுள்ள சேவை மூப்பு மற்றும் திறமை அடிப்படையில், அதிபர், பிரதி அதிபர், உதவி அதிபர் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை முற்றாகப் புறந்தள்ளி - சேவை மூப்பு மற்றும் திறமை கருத்தில் கொள்ளாமலும் மேற்படி கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும், அதிபராக, பிரதி அதிபராக, உதவி அதிபராக எழுந்தமானமாகவும், பாரபட்சமாகவும் குறித்த இடநிலைப்படுத்தல் நடைமுறைப்படுத்தமை தொடர்பிலும் பாதிக்கப்பட்ட தரப்பினரால் இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

மேலும், சேவை மூப்பு மற்றும் திறமை கூடியவர்களினை அதிபராக நியமிக்காமல் பாரபட்சங்கள் காட்டப்பட்டுள்ளதின் மூலம், அதிபர் சேவைப் பிரமாணக்குறிப்பினை மீறுவது மட்டுமல்லாமல், பாரபட்சங்கள், தலையீடுகள் மூலம் வடக்கு மாகாணத்தின் கல்வி வளர்ச்சியை தோல்வி அடையச் செய்யும் செயற்பாடாகவும் சந்தேகிக்கின்றோம்.

அத்தோடு, வெளிமாவட்டத்தில் இடநிலைப்படுத்தப்பட்ட அதிபர் சேவையினை சேர்ந்த சிலரை அரசியல் தலையீடு மற்றும் பல்வேறு வகையான செல்வாக்கின் அடிப்படையில், மருத்துவ சபையினுடைய தீர்மானமின்றி அவர்கள் கடமையேற்று சில வாரங்கள் மற்றும் மாதங்களில் மருத்துவக் காரணம் என்னும் சோடிக்கப்பட்ட காரணங்களினை உருவாக்கி, அவர்களுக்கு சொந்த வலயம் மற்றும் சொந்த மாவட்டத்திற்கு தன்னிச்சையாக இடமாற்றமும் வழங்கப்பட்டுள்ளமை தொடர்பிலும் எமது கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.

அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பிற்கு முரணாகவும், பாரபட்சங்களாகவும் இடநிலைப்படுத்தல் மேற்கொள்ளப்பட்டமையாலும் பாதிக்கப்பட்ட குறித்த தொகை அதிபர்கள் இன்று வரை கடமையேற்க முடியாமல் உள்ளமை தொடர்பிலும் தங்களின் கவனத்துக்குக் கொண்டுவருகின்றோம்.

பாதிக்கப்பட்ட அக்குறித்த தொகை அதிபர்களின் விடயத்தினை அதிபர் சேவைப் பிரமாணக் குறிப்பின் அடிப்படையிலும், நியாயமான முறையிலும் பரிசீலித்து - அக்குறித்த தொகை அதிபர்களும் கடமையேற்கும் வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்." என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த விடயம் தொடர்பில் பாதிக்கப்பட்ட அதிபர் ஒருவர் ஐனாதிபதி செயலகத்திற்க்கும் முறைப்பாடொண்றினை முன்வைத்து ஆளுநரின் கவனத்திற்க்கு ஐனாதிபதி செயலகத்தாலும் குறித்த விடயம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் வடமாகாணம் கல்வியில் கடந்த க.பொ.த சாதாரண தரம் மற்றும் உயர்தர பரீட்சைகளில் பாரிய பின்னடைவுகளினை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கையாலாகாத ஆளுநர் ஆசிரியர் சங்கங்கள், அதிபர் சங்கங்கள் போன்ற பல அமைப்புக்களினுடைய முறைப்பாடுகளினை தாண்டியும் கல்வியமைச்சின் செயலாளருக்கு எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் தினறிவருகின்றார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now