சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடு...
News
சுங்கத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுவிக்க ஜனாதிபதி உத்தரவு!
சுங்கத் திணைக்களத்தினால் விடுவிக்கப்படாத முஸ்லிம்களின் குர்ஆன்களை விடுவிக்குமாறு முஸ்லிம் கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளருக்கு ஏற்கனவே பணிப்புரை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக் கூட்டம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் 23.11.2026ல் பாராளுமன்றக் கட்டிடத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
அம்பாறை மாவட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினரான எம்.எஸ்.உதுமாலெப்பை உரையாற்றுகையில் ,
ஜனாதிபதி அவர்களே!
முஸ்லிம் சமூகத்தின் புனித ரமலான் மாதம் நெருங்கி வருவதால் தடை செய்யப்பட்டுள்ள புனித குர்ஆன்களை நீங்கள் விடுதலை செய்யுங்கள். எமது முஸ்லிம் சமூகம் முன்னாள் ஜனாதிபதி கோத்தபாயவுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக எங்களை பழிவாங்கும் நோக்குடன் எமது புனித குர்ஆன்களை தடை செய்தார். ஆனால், நீங்கள் தடை செய்யப்பட்ட குர்ஆன்களை விடுதலை செய்வீர்கள் என எமது முஸ்லிம் சமூகம் நம்பிக்கை வைத்துள்ளது. எமது சமூகத்தின் புனித குர்ஆன்களை விடுதலை செய்யுமாறு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
இது தொடர்பாக கௌரவ ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்கள், தடை செய்யப்பட்டுள்ள குர்ஆன் பிரதிகளை விடுதலை செய்வதற்கு முஸ்லிம் உலமாக்கள் மத்தியிலிருந்து முரண்பாடுகள் நிலவியது. அது தொடர்பாக கலந்துரையாடி அதன் பின்னர் முஸ்லிம் கலாசார திணைக்களத்தின் பணிப்பாளரிடம் குர்ஆன்களை விடுதலை செய்யுமாறு ஏற்கனவே பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். பிரதி அமைச்சர் முனீர் முலப்பர் அவர்கள் இது தொடர்பான செயற்பாடுகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பிரதி அமைச்சருக்கு பணிப்புரை வழங்கினார்.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.உதுமாலெப்பை, ஜனாதிபதி அவர்களே நீங்கள் பணிப்புரை வழங்கியபோதும் சென்ற 16.11.2026 ஆம் திகதி நடைபெற்ற புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கூட்டத்தில் முஸ்லிம்களின் குர்ஆன்களை விடுதலை செய்யுமாறு வேண்டுகோள் விடுத்த போது அமைச்சர் கௌரவ சுனில் செனவி குர்ஆன்களை விடுதலை செய்யுமாறு முஸ்லிம் கலாசார திணைக்களப் பணிப்பாளரிடம் பணிப்புரை விடுத்தார். முஸ்லிம் கலாசார திணைக்கள பணிப்பாளர் எம்.எஸ்.எம்.நவாஸ் திணைக்களம் குர்ஆன்களை விடுதலை செய்வதற்கு 03 கோடி ரூபா செலுத்த வேண்டும் எனக் கூறியுள்ளதாகவும், தான் சுங்கத் திணைக்களத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தெரிவித்தார் என பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தெரிவித்தார்.
புனித குர்ஆன் பிரதிகளை சுங்கத் திணைக்களத்திற்கு கட்டணம் செலுத்தாமல் விடுதலை செய்யும் செயற்பாடுகளை முன்னெடுத்து செயற்படும்படி அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை வழங்கினார்.
அதனையடுத்து ஜனாதிபதி அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர் உதுமாலெப்பை தனது நன்றியை தெரிவித்தார்.