New Updates! Fresh news just arrived.

இஸ்ரேலுக்கான 4 பில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்துவதற்கு...

News

இஸ்ரேலுக்கான 4 பில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்துவதற்கு அதிபர் முடிவு!

November 4, 2026 4:01 am
இஸ்ரேலுக்கான 4 பில்லியன் டொலர் நிதியுதவியை நிறுத்துவதற்கு அதிபர் முடிவு!
இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆண்டுதோறும் வழங்கி வருகின்ற சுமார் 4 பில்லியன் டொலர் அளவிலான நிதியுதவியை இவ்வாண்டின் (2026) இறுதியிலிருந்து நிறுத்துவதற்கு இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் உடன்படிக்கை எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதன்படி, இஸ்ரேல் தற்போது பொருளாதார ரீதியில் வலுவான நாடாக வளர்ந்திருப்பதினால், அதற்கு மேற்கொண்டு குறித்த நிதியுதவி தேவையில்லை என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த நிதியுதவிகளினை நிறுத்தலாம் என்கின்ற யோசனையை நெதன்யாகுவே தன்னிடம் முன்வைத்ததாகவும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த முடிவின் மூலம் இஸ்ரேலுடனான நட்பு முறிந்துவிடாது எனவும், எதிர்காலத்தில் தேவைப்பட்டால் உதவிகள் செய்யப்படும் என்றும் மற்றும் இஸ்ரேல் வழக்கம்போல் அமெரிக்காவிடமிருந்து ஆயுதங்களினை விலைக்கு வாங்கிக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now