New Updates! Fresh news just arrived.

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவ...

News

எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்

May 14, 2026 10:23 am
எரிபொருள் விலை அதிகரிப்பு குறித்து ஜனாதிபதி வெளியிட்ட தகவல்
எரிபொருள் நுகர்வைக் குறைப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கம் எனவும், உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்புக்கு ஏற்பவே உள்நாட்டில் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

நுவரெலியா மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.

அத்துடன் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், தற்போது இலங்கையில் ஒரு லீற்றர் டீசலின் உண்மையான செலவு 720 ரூபாய் வரை அதிகரித்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

டீசல் விலையை 392 ரூபாயாகப் பேணுவதற்காக, அரசாங்கம் தற்போது ஒரு லீற்றருக்கு சுமார் 100 ரூபாய் மானியத்தை வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.

இந்த மானியக் கொள்கையினால் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் (CPC) பாரிய நஷ்டத்தைச் சந்தித்து வருவதாகவும், இவ்வாறானதொரு முறைமையை நீண்ட காலத்திற்கு முன்னெடுத்துச் செல்வது சாத்தியமற்றது எனவும் ஜனாதிபதி எச்சரிக்கை விடுத்தார்.

எரிபொருள் பாவனையைக் குறைப்பதன் மூலம் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதே அரசாங்கத்தின் நீண்டகால எதிர்பார்ப்பு என அவர் மேலும் விளக்கமளித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now