New Updates! Fresh news just arrived.

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு!

News

இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு!

March 17, 2026 5:18 pm
இன்று இரவு ஜனாதிபதி விசேட ஊடக சந்திப்பு!
நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (17) இரவு விசேட ஊடக சந்திப்பொன்றினை நடாத்தவுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய நிலையில் அமைச்சர் இதனைத் தெரிவித்ததுடன், எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"வெள்ளிக்கிழமை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று இரவு 7.30 மணிக்கு ஊடக சந்திப்பொன்றினை நடைபெறவுள்ளது. அந்த நேரத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பாராளுமன்றத்திலிருந்தால், ஜனாதிபதியுடன் கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவும் நாம் எதிர்பார்க்கின்றோம். ஜனாதிபதியின் கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் கருத்து தெரிவிக்க விரும்பினால், வெள்ளிக்கிழமை அவர்களுக்கு குறித்த வாய்ப்பை வழங்கவும் நாம் எதிர்பார்க்கின்றோம்" என அமைச்சர் தெரிவித்தார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now