New Updates! Fresh news just arrived.

ஜனாதிபதியின் திடீர் விஜயம்: அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய ...

News

ஜனாதிபதியின் திடீர் விஜயம்: அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு

May 19, 2026 2:03 pm
ஜனாதிபதியின் திடீர் விஜயம்: அமைச்சர்கள் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பங்கேற்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (19) முற்பகல் ராகமவில் அமைந்துள்ள “ரணவிரு செவன” நலன்புரி மையத்திற்கு விஜயம் செய்து, அங்கு தங்கி சிகிச்சை பெற்று வரும் பாதுகாப்புப் படையினரின் நலம் விசாரித்துள்ளார்.

இங்கு பாதுகாப்புப் படையினர்களுடன் சுமூகமாகக் கலந்துரையாடிய ஜனாதிபதி, தாய்நாட்டின் ஒருமைப்பாட்டிற்காக அவர்கள் அனைவரும் செய்த அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, “ரணவிரு செவன” நிலையத்தில் பணியாற்றும் வைத்தியர்கள் உள்ளிட்ட ஊழியர்களுடனும் கலந்துரையாடிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சிகிச்சை பெற்று வரும் படையினருக்கு மேலும் வழங்கக்கூடிய மருத்துவ மற்றும் ஏனைய வசதிகள் குறித்தும் ஆராய்ந்தார்.

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வுபெற்ற) சம்பத் துய்யகொந்தா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் லசந்த ரொட்றிகோ, இராணுவ சேவைகள் மற்றும் புனர்வாழ்வு பணிப்பாளர் பிரிகேடியர் ஆர்.ஜி.எல்.கே. வீரகோன், ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் ஓய்வுபெற்ற பிரிகேடியர் செனரத் கொஹொன உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now