அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் வ...
News
அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ள அத்தியாவசியப் பொருட்களின் விலைகள்!
லங்கா சதொச நிறுவனமானது 18 அத்தியாவசிய உணவுப் பொருட்களினுடைய விலைகளைக் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
இதன்படி, நாளை (10) தொடக்கம் குறித்த புதிய விலை திருத்தங்கள் அமுலுக்கு வரும் என்று வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.
பெரிய வெங்காயம், வெள்ளைச் சீனி, பருப்பு, தட்டைப்பயறு, கடலை, பாசிப்பயறு, கொண்டைக்கடலை, கோதுமை மா, சிவப்பு பச்சரிசி, சிவப்பு நாட்டரிசி, சம்பா அரிசி, வெள்ளை நாட்டரிசி, பொன்னி சம்பா உள்ளிட்ட 18 வகையான பொருட்கள் இந்த விலைக்குறைப்புப் பட்டியலில் அடங்குவதாக அமைச்சு கூறியுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் யுத்த சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில், நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் அரசாங்கத்தின் தலையீட்டுடன் இப்பொருட்களின் விலைகளைக் குறைக்கத் தீர்மானித்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
அந்த விலை விபரங்கள் கீழே,