New Updates! Fresh news just arrived.

பிரதமர் ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

News

பிரதமர் ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!

August 31, 2026 10:21 am
பிரதமர் ஹரினி அமரசூரிய பூட்டான் பயணம்!
உலகளாவிய விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) பங்கேற்பதற்காகப் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய இன்று (31) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து பூட்டானுக்குப் புறப்பட்டுச் சென்றார்.

செப்டம்பர் 1 ஆம் திகதி பூட்டானில் நடைபெறும் இம்மாநாட்டின் தொடக்க அமர்வில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய பங்கேற்கவுள்ளதுடன், அங்கு "நெருக்கடிகளை எதிர்கொள்ள விழிப்புணர்வோடு எழுச்சி பெறுதல்" (Rising to the Moment: Igniting Consciousness to Address the Polycrisis) என்ற தலைப்பில் முதன்மை உரையாற்றவுள்ளார்.

இப்பயணத்தின் போது பிரதமர், சர்வதேசத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளதுடன், நிலையான உணவு முறைமைகள், உணவுப் பாதுகாப்பு மற்றும் சமூகப் பங்களிப்பிற்கான ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now