New Updates! Fresh news just arrived.

அஸ்வெசுமவுக்கு போலி தகவல்களை வழங்குபவர்களுக்கு சிறை தண்டன...

News

அஸ்வெசுமவுக்கு போலி தகவல்களை வழங்குபவர்களுக்கு சிறை தண்டனை நலன்புரி நன்மைகள் சபை அதிரடி அறிவிப்பு

March 13, 2026 8:29 pm
அஸ்வெசுமவுக்கு போலி தகவல்களை வழங்குபவர்களுக்கு சிறை தண்டனை நலன்புரி நன்மைகள் சபை அதிரடி அறிவிப்பு
அஸ்வெசும நலத்திட்ட கொடுப்பனவு தொடர்பான தகவல்களில் பொய்யான தகவல்களை வழங்கும் அல்லது வழங்கியதாக கண்டறியப்படும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அத்தகைய சந்தர்ப்பங்களில், குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஒருவருக்கு ஒரு வருடம் வரை சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்வெசும திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், சலுகைகளுக்கு விண்ணப்பித்தவர்கள் மற்றும் 2023 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளில் விண்ணப்பிக்காதவர்களின் தகவல்களை புதுப்பிக்கும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதுவரை சுமார் 29 இலட்சத்து 93 ஆயிரத்து 558 பேர் தங்களது தகவல்களை சமர்ப்பித்துள்ளதாக நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அந்த தகவல்களை சரிபார்க்கும் வகையில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடவடிக்கையும் தற்போது நடைபெற்று வருகிறது.

இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு எதிர்வரும் 28 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு தவறான தகவல்களை வழங்குவது நலன்புரி நன்மைகள் சட்டத்தின் 20 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.

அத்தகைய குற்றச்சாட்டில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டால், 5,000 ரூபாய்க்கு அதிகமாகாத அபராதம் அல்லது ஒரு வருடம் வரை சிறை தண்டனை வழங்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் இருப்பதாகவும் நலன்புரி நன்மைகள் சபை மேலும் தெரிவித்துள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now