New Updates! Fresh news just arrived.

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து: எடுக்கப்...

News

பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை!

March 19, 2026 8:53 pm
பயணிகளை இடைநடுவில் இறக்கிவிட்ட தனியார் பேருந்து: எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை!
பயணிகளினை இடைநடுவில் இறக்கிவிட்டு, தனியார் நிறுவனப் பணியாளர்களை ஏற்றிச்சென்ற தனியார் பேருந்துக்கு 3 நாட்கள் சேவையிலீடுபடத் தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பேருந்தின் நடத்துனருக்கு 5 நாட்கள் சேவைத் தடையும் விதிக்கப்பட்டிருப்பதாக வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின்னுடைய தலைவர், பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

பயணி ஒருவரினால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்தஅதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 14.03.2026 அன்று தனியார் பேருந்தில் பயணித்த பயணிகளினை, பேருந்து பழுதடைந்துவிட்டதாகக் கூறி நடத்துனர் இடைநடுவில் இறக்கிவிட்டுள்ளார். எனினும், சிறிது நேரத்தின் பின்னர் அதே பேருந்து வேறொரு தனியார் நிறுவனத்தினுடைய (ஆடைத் தொழிற்சாலை) பணியாளர்களினை ஏற்றிச் சென்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாதிக்கப்பட்ட பயணியால் வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு ஆதாரங்களோடு முறைப்பாடளிக்கப்பட்டிருந்தது.

குறித்த முறைப்பாடு தொடர்பில் வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையினால் தனியார் பேருந்தின் வழியனுமதிப்பத்திர உரிமையாளர் நேரில் அழைக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டதோடு. விசாரணையின் போது, பேருந்து திருத்த வேலைக்குச் சென்றதும், அதன் பின்னர் ஆடைத்தொழிற்சாலை பயணிகளினை ஏற்றச் சென்றதும் உறுதிப்படுத்தப்பட்துள்ளது.

எனினும், பயணிகளினை அசௌகரியத்துக்குள்ளாக்கி, அவர்களைப் பொறுப்பற்ற விதத்தில் இடைநடுவில் இறக்கிவிட்ட தவறான செயற்பாட்டுக்காக, தனியார் பேருந்தினை 3 நாட்களுக்குச் சேவையில் ஈடுபடுவதற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், இடைநடுவில் இறக்கி விடப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பிய பயணிகளுக்கு உரிய பதிலளிக்காது முரண்பட்டமையுள்ளிட்ட காரணங்களுக்காக நடத்துனர் 5 நாட்களுக்குச் சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளார். மேலும், இனிவரும் காலங்களில் இவ்வாறானதொரு தவறுகளில் குறித்த நபர் ஈடுபடமாட்டார் என்பதினை ஏற்று உறுதியுரையாக அதிகார சபையால் பெறப்பட்டுள்ளது.

பாதுகாப்பானதும், தரமானதுமான போக்குவரத்துச் சேவையினை உறுதிப்படுத்துவதற்காகவே வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபை நிறுவப்பட்டுள்ளது. ஆகவே, பொதுப் போக்குவரத்தின் போது இவ்வாறான அசௌகரியங்கள், விதிமீறல்கள் அல்லது முறைகேடுகள் இடம்பெற்றால், பொதுமக்கள் தயங்காது ஆதாரங்களோடு (ஒளிப்படம் அல்லது காணொலி) 071 9090900 என்ற வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு அதிகார சபையினுடைய தலைவர் பொதுமக்களினைக் கேட்டுக்கொண்டுள்ளார்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now