New Updates! Fresh news just arrived.

தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான வரிக் கொள்கை அவசியம்! ...

News

தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான வரிக் கொள்கை அவசியம்!

September 30, 2026 4:34 am
தொழில்சார் நிபுணர்களுக்கு நியாயமான வரிக் கொள்கை அவசியம்!
வைத்தியர்கள் உள்ளிட்ட தொழில்சார் நிபுணர்களுக்கான வரிக் கொள்கையில் நியாயமான மாற்றங்களை மேற்கொள்ளுமாறு அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் வரி வருவாயில் பாதிப்பு ஏற்படாத வகையில், இம்முறை வரவு செலவுத் திட்டத்திற்காக ஜனாதிபதியிடம் பல்வேறு முன்மொழிவுகளை சமர்ப்பித்துள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அரசாங்கத்தின் வரி வருவாய் 5,400 பில்லியன் ரூபாவைத் தாண்டியதாகவும், 2025ஆம் ஆண்டில் PAYE வரி வருவாய் எதிர்பார்ப்பை விட 30 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததாகவும் GMOA சுட்டிக்காட்டியுள்ளது.

தற்போதைய வரி முறையால் வைத்தியர்கள் உள்ளிட்ட நிபுணர்கள் எதிர்கொள்ளும் பொருளாதார அழுத்தத்தை குறைத்து, நாட்டின் திறமையான மனித வளத்தை தக்கவைத்துக்கொள்ள நீண்டகாலத் திட்டம் அவசியம் எனவும் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now