New Updates! Fresh news just arrived.

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தினுடைய தவிசாளராக பேரா...

News

சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தினுடைய தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்!

July 19, 2026 2:35 pm
சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தினுடைய தவிசாளராக பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமனம்!
சீனா – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தினுடைய புதிய தவிசாளராக, தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமாகிய பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் நியமிக்கப்பட்டுள்ளார்.

அரச சார்பற்ற சர்வதேச அமைப்பாகிய 'சீன – இலங்கை கல்வி நட்புறவு சங்கத்தின்' மாநாடு அண்மையில் சீனாவில் நடைபெற்ற நிலையில் இவருக்கான புதிய தவிசாளர் நியமனம் உத்தியோகபூர்வமாக வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தினுடைய முன்னாள் உபவேந்தரான பேராசிரியர் எஸ்.எம்.எம். இஸ்மாயில், சம்மாந்துறை தேர்தல் தொகுதியின் ஊடாக தீவிர அரசியலில் பிரவேசித்து நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார்.

இதேவேளை, அரசியல் பணிகளுக்குப் பின்பும், தனது கல்விப் புலமைப்பின்னணியைக் கொண்டு இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி மற்றும் கலாசார உறவுகளினை மேம்படுத்தும் நோக்கில் குறித்த சர்வதேசப் பதவியினை அவர் பொறுப்பேற்றுள்ளமையானது குறிப்பிடத்தக்கது.

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now