3 முக்கிய துறைகள் ஊடாக சுகாதார சேவையை மேம்படுத்த திட்டம் ...
News
3 முக்கிய துறைகள் ஊடாக சுகாதார சேவையை மேம்படுத்த திட்டம் – ஜனாதிபதி!
நாட்டு மக்களுக்கு தரமானதும் ஆரோக்கியமானதுமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக சுகாதாரத் துறையில் மூன்று முக்கிய விடயங்களுக்கு அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
அதன்படி, இலவச மருத்துவ சேவையை மக்களுக்கு மேலும் நெருக்கமாக கொண்டு செல்வது முதலாவது இலக்காகும். இதற்காக கிராமப்புற மக்களை மையப்படுத்தி ‘ஆரோக்கியா’ வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், நவீன மருத்துவ உபகரணங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை நாட்டின் சுகாதார கட்டமைப்புக்குள் அறிமுகப்படுத்தி மேம்பட்ட மருத்துவ சேவையை உருவாக்குவது இரண்டாவது நோக்கமாகும்.
சுகாதாரத் துறையில் திறமையான முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்குவது மூன்றாவது முக்கிய இலக்கு எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.