New Updates! Fresh news just arrived.

பாடசாலை மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை: சம்மாந்துற...

News

பாடசாலை மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை: சம்மாந்துறை பிரதேச சபை அறிவிப்பு!

March 16, 2026 1:34 pm
பாடசாலை மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் தடை: சம்மாந்துறை பிரதேச சபை அறிவிப்பு!
சம்மாந்துறை பிரதேச சபை, சம்மாந்துறை வலயக் கல்வி அலுவலகம், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை மற்றும் சமூக சேவைகள் அமைப்புகள் இணைந்து எடுத்த தீர்மானத்தின் அடிப்படையில், பாடசாலை மாணவர்களுக்கு நவீன முறையில் சிகை அலங்காரம் செய்வதைத் தவிர்க்குமாறு சிகை அலங்கார நிலைய உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 20 வயதிற்குட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு நவீன மற்றும் ஒழுங்கற்ற சிகை அலங்காரங்களைச் செய்யாமல் இருப்பதற்கு சிகை அலங்கார நிலைய உரிமையாளர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

இவ்வறிவிப்பை மீறி மாணவர்களுக்கு நவீன சிகை அலங்காரம் செய்து வழங்கும் நிலையங்களின் கடை உரிமப்பத்திரம் (Licence) இரத்து செய்யப்படுவதுடன், சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் சம்மாந்துறை பிரதேச சபை தெரிவித்துள்ளது.

பாடசாலை மாணவர்களின் ஒழுக்கம் மற்றும் கல்வி சூழலை பாதுகாக்கும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now