New Updates! Fresh news just arrived.

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டம்: 2,000க்கும் ...

News

பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டம்: 2,000க்கும் மேற்பட்டோர் கைது!

October 19, 2026 9:01 am
பிரான்ஸில் தீவிரமடைந்துள்ள மக்கள் போராட்டம்: 2,000க்கும் மேற்பட்டோர் கைது!
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டுள்ள போராட்டங்கள் வன்முறைக் கலவரங்களாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்களானது செய்தி வெளியிட்டுள்ளன.

குறித்த வன்முறைகளினால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது இதுவரை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

அத்தோடு, நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் காயமடைந்திருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கலவரங்களின்போது, லிமோஜ் நகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரசபைக் கட்டடமானது தீக்கிரையாக்கப்பட்டுள்ளதோடு, பல வர்த்தக நிலையங்களும் களவாடப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பிரான்ஸில் பல்வேறு நகரங்களில் வன்முறைக் குழுக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றுள்ளதாகவும் குறித்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, எதிர்வருகின்ற 2027ஆம் ஆண்டில் தேர்தல்கள் நெருங்கும் நிலையில், வன்முறை சம்பவங்களால் பிரான்ஸில் பாரிய சமூகப் பதற்றம் அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்திருப்பதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now