மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் - 2026: அல்-ஹிலால் வித்தியாலய...
News
மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் - 2026: அல்-ஹிலால் வித்தியாலய மாணவர் சிறப்புத் தேர்ச்சி!
2026 ஆம் ஆண்டிற்கான மாகாண மட்ட கணித ஒலிம்பியாட் போட்டியில் சாய்ந்தமருது கமு/கமு/ அல்-ஹிலால் வித்தியாலய தரம் 11 மாணவரான எம்.என்.எம். அன்சிப் சிறப்பாகத் தேர்ச்சி பெற்று பாடசாலைக்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
கணிதப் பாடத்தில் கொண்டுள்ள ஆர்வம், கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியின் பலனாக இந்த சிறப்பான சாதனையை அவர் பெற்றுள்ளதாக பாடசாலை நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். மாணவனின் இந்த வெற்றி அவரது குடும்பத்திற்கும் பாடசாலைக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இம்மாணவனைப் போட்டிக்காக தயார்படுத்தி வழிநடத்திய ஆசிரியர் ஏ.எல்.எம். இர்ஷாத் மற்றும் முஹம்மட் ரஜாய் ஆசிரியர் ஆகியோரின் பங்களிப்பு பாராட்டப்பட்டுள்ளது. மேலும், போட்டியில் பங்கேற்பதற்கான ஏற்பாடுகளில் உதவியாகச் சென்ற ஆசிரியர் ஏ.பி. அஸ்வர் மற்றும் விளையாட்டு பயிற்றுநர் முஹம்மட் நுஸ்கி ஆகியோருக்கும் பாடசாலை சமூகம் சார்பில் நன்றிகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
மாணவன் எம்.என்.எம். அன்சிப் எதிர்காலத்தில் மேலும் உயர்ந்த கல்விச் சாதனைகளைப் பெற்று கல்வி உலகில் சிறந்து விளங்க வேண்டும் என பாடசாலை கே.எல். ஜௌபர் அதிபர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.