New Updates! Fresh news just arrived.

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் நாடளாவிய பணிப்புற...

News

பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில்!

August 24, 2026 6:28 am
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று முதல் நாடளாவிய பணிப்புறக்கணிப்பில்!
பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் இன்று (24) காலை 8 மணி முதல் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளது.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுகாதார அலுவலகத்தில் இடம்பெறுவதாகக் கூறப்படும் முறைகேடுகளுக்கு எதிராகக் குரல் எழுப்பிய பொதுச் சுகாதார பரிசோதகர் பி.எச். மிகஸ்தெனிய இடமாற்றம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட போதிலும், சுகாதார அமைச்சினால் இதுவரை உரிய தீர்வு வழங்கப்படவில்லை எனவும் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.

இதன் காரணமாக, நாடு முழுவதும் பணியாற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் மற்றும் நிர்வாகப் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டிய தரவுகள் மற்றும் அறிக்கைகளை வழங்குவதை தற்காலிகமாக நிறுத்தவுள்ளனர்.

மேலும், பல்வேறு தரவு அமைப்புகளில் தகவல்களைப் புதுப்பிக்கும் பணிகளும் இடைநிறுத்தப்படவுள்ளதாக சங்கம் அறிவித்துள்ளது. தொழிற்சங்க நடவடிக்கைக் காலத்தில் பதிவேற்றப்படாத தகவல்கள் பின்னர் தரவு அமைப்புகளில் சேர்க்கப்படாது என்றும் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, பி.எச். மிகஸ்தெனியவின் இடமாற்றத்தை உடனடியாக இரத்து செய்து, அது தொடர்பில் முறையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகம் மற்றும் கட்டுநாயக்க விமான நிலைய சுகாதார அலுவலகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையை குறைக்கும் முயற்சிகளுக்கும் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

எனினும், இந்த விவகாரங்கள் தொடர்பில் நியாயமான விசாரணை நடத்தப்பட்டால் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவதுடன், எந்த நேரத்திலும் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் சங்கத்தின் பதில் தலைவர் மற்றும் செயலாளர் தெரிவித்துள்ளனர்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now