வெளிநாட்டவர்களுக்கு வீடு வழங்குவோருக்கு வெளியான அறிவித்தல...
News
வெளிநாட்டவர்களுக்கு வீடு வழங்குவோருக்கு வெளியான அறிவித்தல் - பொலிஸார் விடுத்துள்ள அறிவிப்பு
வெளிநாட்டவர் ஒருவருக்கு வீடு அல்லது ஏதேனும் சொத்துக்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு வழங்கினால், அது குறித்து அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு அறிவிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் எப். யூ. வுட்லர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
சுற்றுலா விசா மூலம் இலங்கை வரும் சில வெளிநாட்டினர், இவ்வாறான வாடகை வீடுகளில் தங்கியிருந்து பல்வேறு இணையவழி குற்றங்கள் மற்றும் நிதி மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தற்போது தகவல்கள் வௌியாகியுள்ளன.
இதன் காரணமாக, இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், நாட்டில் இடம்பெறும் பாரிய அளவிலான நிதி மோசடிகளை கட்டுப்படுத்தவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, வெளிநாட்டினருக்கு தங்களது வீடுகள் அல்லது தங்குமிட வசதிகளை வழங்கும் நபர்கள், இனிவரும் காலங்களில் இது குறித்து மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டும் என ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.