New Updates! Fresh news just arrived.

அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் சுற்றுநிருபம் வெளி...

News

அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் சுற்றுநிருபம் வெளியீடு!

May 1, 2026 1:41 pm
அரச சேவையில் ஊழியர்களை நிரந்தரமாக்கும் சுற்றுநிருபம் வெளியீடு!
அரச நிறுவனங்களில் தற்காலிமாக, நாளாந்த பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றுகின்ற ஊழியர்களினை சேவையில் நிரந்தரமாக்குவது தொடர்பிலான 11/2026 இலக்க சுற்றுநிருபம் வெளியிடப்பட்டுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சால் வெளியிடப்பட்டுள்ள குறித்த சுற்றுநிருபம், அனைத்து அமைச்சினுடைய செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச கூட்டுத்தாபனங்கள் மற்றும் விதிகளுக்கமைய அமைக்கப்பட்டுள்ள சபைகளினுடைய தலைவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளினை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, குறித்த தீர்மானத்தின் மூலம் சுமார் 9,800 ஊழியர்கள் நிரந்தர நியமனங்களினை பெற அனுமதி கிடைத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

2026 வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் அறிவிக்கப்பட்டவாறு, தற்போது அரச நிறுவனங்களில் தற்காலிக மற்றும் பதில், ஒப்பந்த அல்லது நிவாரண அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் இதன் கீழ் உள்வாங்கப்படவுள்ளனர்.

ஏற்கனவே நிவாரண அடிப்படையில் பணியாற்றி, சுற்றுநிருப விதிகளுக்கமைய குறித்த நிரந்தர நியமனம் பெற்றிருந்தும், குறித்த நியமனங்கள் இதுவரை முறைப்படுத்தப்படாமல் இருக்கும் ஊழியர்களினை முறைப்படுத்துவது தொடர்பான நடைமுறைகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளமையானது குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now