New Updates! Fresh news just arrived.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக றாபி நியமனம்!

News

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக றாபி நியமனம்!

June 15, 2026 3:36 pm
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக றாபி நியமனம்!
கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளராக இலங்கை நிர்வாக சேவையின் முதலாம் தர அதிகாரியான ஏ.ரி.எம். றாபி நியமிக்கப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகரவினால் திங்கட்கிழமை (15) இந்த நியமனம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2024 ஜனவரி 01 முதல் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக கடமையாற்றி வந்த நிலையில் அவருக்கு இப்பதவி உயர்வு கிடைக்கப் பெற்றுள்ளது.

அதற்கு முன்னதாக அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளராகவும் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆணையாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார்.

உள்ளூராட்சி நிர்வாகத்துறையில் நீண்ட கால அனுபவமும் ஆற்றலும் நிறைந்த ஏ.ரி.எம். றாபி, அத்துறையின் மாகாண ஆணையாளராக நியமிக்கப்பட்டிருப்பதானது மாகாண உள்ளூராட்சி நிர்வாகம் மற்றும் சேவைகளுக்கு கிடைத்திருக்கின்ற பெரும் வரப்பிரசாதமாக நோக்கப்படுகிறது.

(அஸ்லம் எஸ்.மௌலானா)
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now