New Updates! Fresh news just arrived.

ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு தயார்!

News

ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு தயார்!

September 13, 2026 11:03 am
ரயில்வே தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்திற்கு தயார்!
ரயில்வே திணைக்களத்தின் நிர்வாகப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படாவிட்டால், எதிர்வரும் வியாழக்கிழமை முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

புதிய ரயில்வே பொது முகாமையாளரை நியமிப்பது உள்ளிட்ட கோரிக்கைகள் தொடர்பில் நாளை (14) போக்குவரத்துப் பிரதி அமைச்சருடன் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளன.

பேச்சுவார்த்தையில் சாதகமான முடிவு எட்டப்படாவிட்டால் திட்டமிட்டபடி வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படும் எனவும், இதற்கு ரயில் பயணிகள் சங்கங்களின் ஆதரவும் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now