இன்று முதல் இலங்கையில் மழையுடனான வானிலை தீவிரம்: பலத்த ம...
News
இன்று முதல் இலங்கையில் மழையுடனான வானிலை தீவிரம்: பலத்த மழைக்கு வாய்ப்பு!
இன்று (20) மாலை முதல்,
இலங்கைக்கு அருகில் கீழ் வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள வளிமண்டல தளம்பலின் காரணமாக, நாடு முழுவதும் மழையுடனான வானிலை தீவிரமடையும் வாய்ப்புள்ளது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் ஒரு மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
வடக்கு, வடமத்திய, மத்திய, கிழக்கு, வடமேல் அத்தோடு ஊவா மாகாணங்களின் சில இடங்களில் 100 மி.மீ அளவிலான பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது.
அத்தோடு, வட மற்றும் வடமேல் மாகாணங்களில் காலையிலும் மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய அத்துடன் ஊவா மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளையில் மூடுபனி நிலவக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.