சொன்னதைச் செய்த ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே! சஜ...
News
சொன்னதைச் செய்த ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே! சஜித் பெருமிதம்
இலங்கை அரசியல் வரலாற்றில் சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி மறைந்த முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ அவர்களின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கண்டியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார்.
ரணசிங்க பிரேமதாஸ மக்கள் நலன் சார்ந்த பல்வேறு வீடமைப்பு மற்றும் கிராம அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுத்ததுடன், தேர்தல் மேடைகளில் வழங்கிய வாக்குறுதிகளை நடைமுறைப்படுத்திய தலைவராக திகழ்ந்ததாக சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டார்.
அத்துடன், நாட்டின் கல்வி முறைமையில் காணப்படும் ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்காகவே "பிரபஞ்சம்" திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டதாகவும், ஆங்கிலக் கல்வி மற்றும் தகவல் தொழில்நுட்பக் கல்வியின் முக்கியத்துவத்தை பல ஆண்டுகளுக்கு முன்னரே ரணசிங்க பிரேமதாஸ உணர்ந்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது தற்போதைய அரசாங்கத்தையும் விமர்சித்த எதிர்க்கட்சித் தலைவர், தேர்தல் காலத்தில் வழங்கப்பட்ட எரிபொருள் விலை மற்றும் மின்சாரக் கட்டணக் குறைப்பு வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை என குற்றஞ்சாட்டினார்.
மேலும், நாட்டின் முக்கிய பொருளாதாரத் துறைகளில் ஒன்றான ஆடைத் தொழிற்துறை நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், புதிய திட்டங்களைப் பற்றி பேசுவதை விட தற்போதுள்ள தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதே அரசின் முதன்மைக் கடமையாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.