அம்பாறையில் திடீரென உருவான எரிபொருள் வரிசை!
News

பாரசீக வளைகுடாவில் ஏற்பட்டிருக்கும் யுத்த நிலைமையால் எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படும் என்னும் அச்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் பெற்றோல் நிரப்பு நிலையங்களில் திடீரென மக்கள் வரிசைகளில் நின்று வாகனங்களுக்கு பெற்றோல் நிரப்புவதிற்கு முண்டியடிக்கின்றனர்.
இதன்படி, அம்பாறை மாவட்டத்தினுடை கல்முனை, நற்பிட்டிமுனை, மருதமுனை ,பெரிய நீலாவணை மற்றும் சாய்ந்தமருது, காரைதீவு ,சம்மாந்துறை ,நிந்தவூர், போன்ற பகுதிகளில் இவ்வாறான நிலைமை தொடர்கின்றது.
இதேவேளை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடும் நெரிசல் தற்போது ஏற்பட்டு வருகின்றது.அம்பாறை மாவட்டத்திலுள்ள சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கட்டுப்பாடுகளோடு எரிபொருட்கள் வழங்கப்பட்டு வருவதோடு, சில இடங்களில் இல்லை என்ற வாசகத்தாலல் பொதுமக்கள் பெரும் சிரமங்களினை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும் பொலிஸார் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் வாகனங்களினை வரிசையில் நிற்கும் போது போக்குவரத்து நெரிசலினை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கின்றனர்.
தற்போது எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக என்றுமில்லாத அளவிற்கு நீண்ட வரிசைகளில் மக்கள் முண்டியடிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள சமயங்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களின் முன்பாக நின்ற வரிசைகளினை விட தற்போதே நீளமான வரிசைகளில் மக்கள் நிற்பதினை அவதானிக்க முடிகின்றது.
மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோ வாகனங்களையே அதிகமாக பெற்றோலினை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காணப்பட்டது.
இதேநேரம் டீசலை பெற்றுக்கொள்ளும் பொருட்டும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்களும் வரிசையில் காத்திருந்தன.
(பாறுக் ஷிஹான்)