நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை: 5,747 பேர் பாதிப்பு! - Gu...
News
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை: 5,747 பேர் பாதிப்பு!
நாட்டின் பல பகுதிகளிலும் நிலவி வருகின்ற சீரற்ற வானிலையின் காரணமாக இதுவரைக்கும் 5,747 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையமானது தெரிவித்துள்ளது.
அனர்த்த முகாமைத்துவ நிலையமானது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 166 பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட 1,594 குடும்பங்களினை சேர்ந்த 5,747 பேர் குறித்து மழையுடனான சீரற்ற வானிலையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்த நிலை காரணமாக கடந்த செப்டம்பர் மாதம்18 ஆம் திகதி தொடக்கம் இதுவரை 8 உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதோடு, ஒருவர் காணாமல் போயுள்ளதாகவும், மேலும் 12 பேர் காயமடைந்திருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையமானது குறிப்பிட்டுள்ளது.
அத்தோடு, குறித்த சீரற்ற வானிலையினால் 4 வீடுகள் முழுமையாகவும், 953 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்திருப்பதாக அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள சில பகுதிகளில் மழை பெய்துவருகின்ற போதிலும், நிலவும் கடும் வறண்ட காலநிலையின் காரணமாக நாட்டினுடைய 12 மாவட்டங்கள் தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளன.
குறித்த அறிக்கையின்படி, வறட்சியினால் பாதிக்கப்பட்டுள்ள 12 மாவட்டங்களுக்குட்பட்ட 32 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 47,583 குடும்பங்களினை சேர்ந்த 156,756 பேர் சிரமங்களினை எதிர்கொண்டுள்ளனர்.
இதனைக் கருத்திற்கொண்டு, பாதிக்கப்பட்டுள்ள குறித்த 32 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 28 பிரிவுகளுக்கு அவசியமான குடிநீர் விநியோகப் பணிகளினை அனர்த்த முகாமைத்துவ நிலையமானது முன்னெடுத்துள்ளது.
இதன் ஊடாக 38,547 குடும்பங்களினை சேர்ந்த 128,977 பேருக்குத் தற்பொழுது குடிநீர் விநியோகிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையமானது மேலும் தெரிவித்துள்ளது.