New Updates! Fresh news just arrived.

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி மாற்றம் - பொதுமக்களுக்கான ...

News

எரிபொருள் விநியோகத்தில் அதிரடி மாற்றம் - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்

April 6, 2026 12:32 pm
எரிபொருள் விநியோகத்தில் அதிரடி மாற்றம் - பொதுமக்களுக்கான முக்கிய அறிவித்தல்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்ட எரிபொருள் விநியோகத் தடைகளை சீர்செய்து, விநியோகத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

நேற்று (05) மாத்தறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

எரிபொருள் விநியோகத்தை சீராக முன்னெடுப்பதற்காக ஏப்ரல் மாதத்திற்குள் 9 எரிபொருள் கப்பல்கள் இலங்கைக்கு வருகை தரவுள்ளன.

எனவே பொதுமக்கள் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு போர் வெடித்ததன் பின்னர் உருவான எரிசக்தி நெருக்கடியை அரசாங்கம் ஏற்கனவே வெற்றிகரமாக நிர்வகித்துள்ளது.

தட்டுப்பாடுகளைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட QR குறியீடு அடிப்படையிலான விநியோகம், ஒற்றை-இரட்டை (Odd-Even) இலக்க முறை மற்றும் புதன்கிழமை பொது விடுமுறை என்பன குறுகிய கால தீர்வுகளாகவே நடைமுறைப்படுத்தப்பட்டன.

தற்போது எரிபொருள் வரிசைகள் குறைந்துள்ளன.

விநியோக நிலைமை மேலும் சீரடையும் பட்சத்தில், தற்போதுள்ள கட்டுப்பாடுகளைப் படிப்படியாக நீக்க அரசாங்கம் தயாராக உள்ளது.

இந்தநிலையில் எரிபொருள் நுகர்வைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட புதன்கிழமை விடுமுறை முறைமை, நிலைமை வழமைக்குத் திரும்பியதும் நீக்கப்பட்டு, நாட்டின் செயல்பாடுகள் இயல்பு நிலைக்கு கொண்டுவரப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் QR முறைமை தற்போது வினைத்திறனாகச் செயல்பட்டு வருவதாகவும், விநியோகக் கட்டமைப்பை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டின் இயல்பு நிலையை உறுதிப்படுத்த அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now