ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகரவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட...
News
ரவி செனவிரத்ன, ஷானி அபேசேகரவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகத் தீர்ப்பு!
முன்னாள் பொலிஸ்மா அதிபரான தேசபந்து தென்னகோன் மற்றும் இருவர், பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சினுடைய செயலாளர் ரவி செனவிரத்ன மற்றும் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) தற்போதைய பிரதிப் பொலிஸ்மா அதிபரான ஷானி அபேசேகர ஆகியோரின் அடிப்படை உரிமைகளினை மீறியுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
அதன்படி, குறித்த முறைப்பாட்டைச் சமர்ப்பித்த ஓய்வுபெற்ற பிரதிப் பொலிஸ்மா அதிபர் பாலித சிறிவர்தன தலா 50,000 ரூபாவையும், குறித்த விசாரணையை மேற்கொண்ட குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் அப்போதைய பிரதான பொலிஸ் பரிசோதகர் இந்துக்க டி சில்வா தலா 10,000 ரூபாவையும் மனுதாரர்களான ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோருக்கு நஷ்டஈடாகச் செலுத்த வேண்டும் என்றும் அத்தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்பாகத் தங்களை சட்டவிரோதமாகக் கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரணை செய்த பின்னரே உயர் நீதிமன்றம் இந்த உத்தரவை அறிவித்தது.