New Updates! Fresh news just arrived.

றிஸ்லி முஸ்தபாவினால் பாடசாலைக்கு கதிரைகள் வழங்கி வைப்பு! ...

News

றிஸ்லி முஸ்தபாவினால் பாடசாலைக்கு கதிரைகள் வழங்கி வைப்பு!

October 20, 2026 2:06 pm
றிஸ்லி முஸ்தபாவினால் பாடசாலைக்கு கதிரைகள் வழங்கி வைப்பு!
கல்முனை கல்வி வலய சாய்ந்தமருது அல் கமருன் வித்தியாலயத்தின் தேவையைக் கருத்திற்கொண்டு, மயோன் குழுமத் தலைவரும், மயோன் கல்வி உதவி மையத்தின் தலைவருமான எம். றிஸ்லி முஸ்தபாவினால் பாடசாலைக்கு கதிரைகள் வழங்கி வைக்கப்பட்டன.

பாடசாலை அதிபர் நுஸ்ரத் பானு தலைமையில் இன்று காலை பாடசாலையில் நடைபெற்ற மாணவர்களின் ஒன்று கூடலின்போது, குறித்த கதிரைகள் உத்தியோகபூர்வமாக வழங்கி வைக்கப்பட்டன. பாடசாலையின் கோரிக்கைக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து மாணவர்களின் கல்விச் சூழலை மேம்படுத்துவதற்கான இவ்வுதவி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.எச். அல் ஜவாஹிர், மயோன் குழும உறுப்பினர் ஏ.எல்.எம். நியாஸ், பாடசாலையின் பிரதி அதிபர், உதவி அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

பாடசாலையின் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் தொடர்ச்சியாகப் பல்வேறு உதவித் திட்டங்களை முன்னெடுத்து வரும் றிஸ்லி முஸ்தபாவின் இச்செயற்பாட்டைப் பாராட்டிய நிகழ்வில் கலந்து கொண்டோர், அவருக்கு தமது நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now