New Updates! Fresh news just arrived.

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளுக்கு மீண்டும் விளக்கம...

News

போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளுக்கு மீண்டும் விளக்கமறியல்!

May 12, 2026 5:13 pm
போதைப்பொருளுடன் சிக்கிய 23 பிக்குகளுக்கு மீண்டும் விளக்கமறியல்!
தாய்லாந்தில் இருந்து 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' ரக போதைப்பொருட்களினை நாட்டுக்குள் கொண்டு வந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த 23 பிக்குகள், வருகின்ற 26 ஆம் திகதி வரைக்கும் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன்படி, குறித்த சந்தேகநபர்களினை இன்று (12) நீர்கொழும்பு நீதவான் சுபாணி அபேசேகர முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்திற்குச் சுற்றுலா சென்றிருந்த குறித்த 22 பிக்குகளும், கடந்த ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி நாட்டிற்குத் திரும்பிய நிலையில், அவர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளிலிருந்து 112 கிலோகிராம் 'குஷ்' மற்றும் 'ஹேஷ்' போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதினைத் தொடர்ந்து கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணைகளில், 'அமிதானந்த' என்னும் பிக்கு ஒருவரே குறித்த சட்டவிரோத செயலை வழிநடத்தியுள்ளமை தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து, அமிதானந்த என்கின்ற பிக்குவும் கம்பஹா பகுதியிலுள்ள விகாரை ஒன்றில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now