வடக்கு மற்றும் கிழக்கில் 2 இலட்சம் காணிகளை விடுவிக்க பரிந...
News
வடக்கு மற்றும் கிழக்கில் 2 இலட்சம் காணிகளை விடுவிக்க பரிந்துரை!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 2 இலட்சம் ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கான பரிந்துரைகள் விரைவில் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக சுற்றுச்சூழல் அமைச்சர் கௌரவ கலாநிதி தம்மிக்க படபெந்தி தெரிவித்தார்.
இந்த அறிவிப்பை வரவேற்ற வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்களின் வாழ்விடங்களையும் வாழ்வாதாரங்களையும் மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு நன்றி தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் கட்டுப்பாடுகள் காரணமாகக் காணப்படும் பிரச்சினைகள், அபிவிருத்திப் பணிகளில் நிலவும் தடைகள் மற்றும் காணிகளை விடுவிப்பது தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், சுற்றுச்சூழல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க படபெந்தி, பிரதி அமைச்சர் அன்ரன் ஜெயக்கொடி ஆகியோரின் பங்கேற்புடன் ஆளுநர் செயலகத்தில் இன்று (16) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கலந்துரையாடலில் ஆரம்ப உரையாற்றிய ஆளுநர், 2012ஆம் ஆண்டு வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட காணிகளில் மக்களின் வாழ்விடங்களும் வாழ்வாதாரக் காணிகளும் உள்ளடங்கியுள்ளதாகச் சுட்டிக்காட்டினார். இதனை மக்கள் தமக்கு இழைக்கப்பட்ட பாரபட்சமாகக் கருதுவதாகவும் தெரிவித்தார்.
1984ஆம் ஆண்டளவில் தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்கள், இன்றுவரை தமது காணிகளுக்குத் திரும்ப முடியாத நிலைமை தொடர்வதாகவும், இக்காணிப் பிரச்சினைகளால் அபிவிருத்தி மற்றும் புனரமைப்புப் பணிகளைக்கூட முன்னெடுப்பதில் பெரும் தடைகள் காணப்படுவதாகவும் ஆளுநர் குறிப்பிட்டார்.
எனவே, அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவுக்கு மாவட்டச் செயலகங்கள் பரிந்துரைத்த காணிகளையாவது விரைவாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.
இதன்போது, வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர், கௌதாரிமுனை வீதி, ஊர்காவற்றுறை கண்ணகி அம்மன் இறங்குதுறை உள்ளிட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு அனுமதி பெறுவதில் எதிர்கொள்ளப்படும் சிக்கல்களை எடுத்துரைத்தார். உரிய அனுமதிகளுக்காக மாவட்டச் செயலகங்கள் ஊடாக விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்கான அனுமதிகளை விரைந்து வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
இதற்குப் பதிலளித்த சுற்றுச்சூழல் அமைச்சர், அரசாங்கம் அபிவிருத்திக்கு எதிரானது அல்ல எனக் குறிப்பிட்டார். எனினும், ஒவ்வொரு திட்டத்துக்கும் உரிய நடைமுறைகளைப் பின்பற்றுவது அவசியம் எனத் தெரிவித்தார். திட்டங்களைத் தயாரிக்கும் ஆரம்பக் கட்டத்திலேயே வனவளத் திணைக்களம், வனஉயிரிகள் திணைக்களம் மற்றும் கடலோரப் பாதுகாப்புத் திணைக்களம் ஆகியவற்றின் தொடர்பு காணப்படுமாயின், அவற்றின் அனுமதிகளைக் கோர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
குளங்கள், ஆற்றுப்பாதைகள் தொடர்பான தடைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை
கல்மடுக்குளம், வன்னேரிக்குளம், குடமுருட்டிக்குளம், தேவன்பிட்டிக்குளம் ஆகியவற்றின் பராமரிப்பு, புனரமைப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளுக்கு அனுமதி பெறுவதில் நிலவும் தடைகள் தொடர்பில் வடக்கு மாகாண நீர்ப்பாசனத் திணைக்களப் பணிப்பாளர் விளக்கமளித்தார். குளங்களின் அணைக்கட்டுகளை உயர்த்துவது போன்ற பணிகளுக்குக்கூட பல மாதங்களாக அனுமதி கிடைக்காத நிலை காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
இதனையடுத்து, அமைச்சர் சம்பந்தப்பட்ட அதிகாரியுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கலந்துரையாடியதுடன், ஒரு வாரத்துக்குள் முடிவை அறிவிப்பதாகத் தெரிவித்தார்.
பராமரிப்புப் பணிகளின்போது அனுமதிக்கப்பட்ட எல்லைகளைத் தாண்டி வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் சில சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கமளித்தனர். இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் இத்தகைய பணிகளை ஆரம்பிப்பதற்கு முன்னர் வனவளத் திணைக்களத்துக்கு அறிவித்தல் வழங்குதல், சம்பந்தப்பட்ட திணைக்களங்கள் இணைந்து கண்காணித்தல் மற்றும் அவசரப் பராமரிப்புப் பணிகளை விரைவாக ஒருங்கிணைத்தல் ஆகியவற்றுக்கான பொறிமுறைகளை உருவாக்க அமைச்சர் ஆலோசனை வழங்கினார். இதற்காக சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வட்ஸ்அப் குழுவொன்றை உருவாக்கவும் பரிந்துரைத்தார்.
நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள குளங்களின் எல்லைகள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதியுடன் சம்பந்தப்பட்ட திணைக்களங்களை உள்ளடக்கிய குழுவொன்றை அமைக்கவும் அமைச்சர் ஆலோசனை வழங்கினார்.
மேலும், ஆறுகளின் குறுக்கே வீழ்ந்துள்ள மரங்களை அகற்றி நீரோட்டப் பாதைகளைச் சீரமைப்பதற்கு அனுமதி பெறுவதில் உள்ள தடைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. கடந்த டித்வா பேரிடரின்போது ஆற்றுநீரோட்டத்தில் ஏற்பட்ட தடைகளால் சில கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியமை சுட்டிக்காட்டப்பட்டது. இத்தகைய பணிகளுக்கான அனுமதிகளை விரைந்து வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துவதாக அமைச்சர் தெரிவித்தார்.
காணிகளை விடுவிக்கும் செயன்முறை விரைவுபடுத்தப்படும் – அமைச்சர்
கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் தம்மிக்க படபெந்தி, 2012ஆம் ஆண்டு புவியிடங்காட்டித் தொழில்நுட்பத்தைப் (ஜி.பி.எஸ்.) பயன்படுத்தி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெருமளவிலான காணிகள் வனவளத் திணைக்களம் மற்றும் வனஉயிரிகள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகக் குறிப்பிட்டார். அவற்றில் மருத்துவமனைகள், அரச திணைக்களங்களுக்குச் சொந்தமான காணிகள் மற்றும் தனியார் காணிகளும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.
இக்காணிகளை அடையாளம் கண்டு விடுவிப்பதற்காக 2025ஆம் ஆண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் குழுவொன்று நியமிக்கப்பட்டதாகவும், அந்தக் குழுவுக்கு ஆறு மாதங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டபோதும், ஓராண்டு கடந்தும் இ