வடக்கு மாகாண பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர...
News
வடக்கு மாகாண பொதுச் சேவையில் உள்ள வெற்றிடங்களுக்கு ஆட்சேர்ப்பு!
வடக்கு மாகாத்தின் பொதுச் சேவையில் காணப்படுகின்ற தொழில்நுட்பத் துறை சார்ந்த பதவி வெற்றிடங்களினை நிரப்புவதற்காக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவினுடைய செயலாளரான ஆ.சிறியினால் தகுதியானவர்களிடம் இருந்து விண்ணப்பங்களானது கோரப்பட்டுள்ளன.
இதன்படி, குறித்த பதவி வெற்றிடங்களானது திறந்த போட்டிப் பரீட்சை மூலம் நிரப்பப்படவுள்ளதுடன், விண்ணப்பங்கள் கோரப்பட்டிருக்கும் பதவிகலினுடைய விவரம் பின் வருமாறு:
மாகாண தொழில்நுட்பவியல் சேவையினுடைய தொழில்நுட்ப உத்தியோகத்தர் - குடிசார் (Technical Officer - Civil) தரம் III அல்லது பயிற்சித் தரம் ஆகும் .
மாகாண தொழில்நுட்பவியல் சேவையினுடைய தொழில்நுட்ப உத்தியோகத்தர் - மின்னியல் (Technical Officer - Electrical) தரம் III அல்லது பயிற்சித் தரம் ஆகும்.
மாகாண தொழில்நுட்பவியல் சேவையினுடைய தொழில்நுட்ப உத்தியோகத்தர் - படவரைஞர் (Technical Officer - Draughtsman) பயிற்சித் தரம் ஆகும்.
இது தொடர்பிலான முழுமையான விளம்பரம் அடங்கிய அறிவித்தல்கள் மற்றும் விண்ணப்பப் படிவங்களினை அறிந்து கொள்ள www.np.gov.lk என்னும் மாகாண இணையத்தளத்தில் 'Exam and Recruitment Advertisement 2026' என்கின்ற பகுதியின் ஊடாகப் பார்வையிடவும், தரவிறக்கம் செய்து கொள்ளவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமையுடைய விண்ணப்பதாரிகள் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக, தமது விண்ணப்பங்களினை பூர்த்தி செய்து எதிர்வரும் 2026.02.12 ஆம் திகதிக்கு முன்பு அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
பு.கஜிந்தன்