பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்...
News
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை!
காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்பரப்புகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களத்தால் சிவப்பு எச்சரிக்கையானது விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, குறித்த அறிவித்தல் நாளை காலை 10.30 மணி வரையிலான அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு அமுலில் இருக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இதற்கமைவாக, காங்கேசன்துறையில் இருந்து மன்னார் ஊடாக கற்பிட்டி வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 - 70 கிலோமீட்டர் வரைக்கும் அதிகரிக்கக்கூடும் என்பதோடு, குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.