New Updates! Fresh news just arrived.

உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரிய தாக்கல் செய்யப்பட்ட ரி...

News

உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரிய தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனையின்றி நிராகரிப்பு!

July 23, 2026 12:22 pm
உயர்தரப் பரீட்சையை பிற்போடக் கோரிய தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு பரிசீலனையின்றி நிராகரிப்பு!
எதிர்வரும் ஒகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தரப்) பரீட்சையை இரண்டு மாதங்களுக்குப் பிற்போடுமாறு உத்தரவொன்றைப் பிறப்பிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாது நிதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனு தொடர்பில் விரிவாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (23) இந்தத் தீர்மானத்தை அறிவித்துள்ளது.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினாலேயே இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now