New Updates! Fresh news just arrived.

கோர விபத்து: ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனும...

News

கோர விபத்து: ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!

May 31, 2026 9:28 pm
கோர விபத்து: ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதி!
யாழில் பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

இன்றுமாலை யாழ்ப்பாணம் பொலிஸார் மோட்டார் சைக்கிளில் சென்ற ஒருவரை பொலிஸார் துரத்தி வந்தனர். இதன்போது யாழ்ப்பாணம் மவுண்ட் ஹாமல் சந்தியடியில், பொலிஸார் துரத்தி வந்த மோட்டார் சைக்கிளானது வேறொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதன்போது மற்றைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்துள்ளார். பின்னர் துரத்தி வந்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

காயமடைந்த நபர் ஆபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். விபத்து சம்பவம் தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பு.கஜிந்தன்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now