இரண்டு வாரங்கள் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை நிறுத்து...
News
இரண்டு வாரங்கள் தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளை நிறுத்துமாறு வேண்டுகோள்: மட்டக்களப்பு மாநகரசபை!
மட்டக்களப்பு மாநகரசபை எல்லையினுல் இரண்டு வாரங்களுக்கு தனியார் கல்வி நிலைய செயற்பாடுகளினை நிறுத்துமாறு மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன் இன்று (26) வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளார்.
நடந்து முடிந்த கல்வி பொதுத் தராதர சாதாரன தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு ஓய்வினை வழங்கும் வகையில் அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளினை இரு வாரங்கள் தனியார் கல்வி நிலையங்களில் மேற்கொள்ள வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் கல்வி நிலையங்களின் சுகாதார வசதி மற்றும் கற்றல் செயற்பாடுகளுக்கு ஏற்றவகையில் காணப்படுவதினை மாநகர சபையால் உறுதி செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
அத்தோடு, இவ் அறிவுருத்தலை கடைப்பிடிக்காத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக மாநகர சபை கட்டளைச்சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கையானது மேற்கொள்ளப்படவுள்ளன.