New Updates! Fresh news just arrived.

தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாட்டை நிறுத்த வே...

News

தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாட்டை நிறுத்த வேண்டுகோள்!

February 27, 2026 4:57 pm
தனியார் கல்வி நிலையங்களின் கல்விச் செயற்பாட்டை நிறுத்த வேண்டுகோள்!
சம்மாந்துறை பிரதேச சபைக்குட்பட்ட தனியார் கல்வி நிலையங்களினுடைய கல்விச் செயற்பாடுகளினை நான்கு வாரங்களுக்கு நிறுத்துமாறு சம்மாந்துறை பிரதேச சபையினுடைய தவிசாளர் ஐ.எல்.எம்.மாஹிர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நடந்து முடிந்த கல்வி பொதுத் தராதார சாதாரண தரப் பரீட்சையில் தோற்றிய மாணவர்களுக்கு ஓய்வை வழங்கும் நோக்கில், ஏப்ரல் 01ஆம் திகதி வரைக்கும் அவர்களுக்கான கற்றல் செயற்பாடுகளினை தனியார் கல்வி நிலையங்களில் மேற்கொள்ள வேண்டாம் எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடந்த 17ஆம் திகதி சம்மாந்துறை பிரதேச சபை, வலயக் கல்வி அலுவலகம், நம்பிக்கையாளர் சபை மற்றும் தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள், சமூக சேவை அமைப்புகள் இணைந்து எடுத்த தீர்மானத்தினுடைய அடிப்படையில் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த அறிவுறுத்தலை கடைப்பிடிக்காத தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக பிரதேச சபை கட்டளைச் சட்டத்தின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளன

பாறுக் ஷிஹான்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now