வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம...
News
வலி வடக்கு பிரதேச சபையில் மதுபான சாலைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!
வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கான அனுமதியை தடுக்கம்கோரிய தீர்மானம் வலி வடக்கு பிரதேசசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இன்று (15) இடம்பெற்ற சபை அமர்வில் வலி வடக்கு பிரதேசசபை உறுப்பினர் செல்வகுமாரன் விஜயராஜினால் கொண்டுவரப்பட்ட குறித்த பிரேரணையானது தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.
யாழில் புதிதாக நான்கு மதுபான சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட்ட நிலையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதுடன் பல்வேறு தரப்பினரும் மதுபான சாலைக்கு எதிர்ப்பு வெளியிட்டு வந்தனர். இந்நிலையில் குறித்த தீர்மானம் பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டது.
பு.கஜிந்தன்