New Updates! Fresh news just arrived.

சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்ப...

News

சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்!

January 29, 2026 9:13 pm
சிவில் பாதுகாப்பு படையின் 15,000 பேர் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்!
சிவில் பாதுகாப்புப் படையின் சுமார் 5,000 பேரை வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு விடுவிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்ட போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

பொலிஸ் துறைக்குச் சிவில் பாதுகாப்புப் படையிலிருந்து சுமார் 10,000 பேரை இணைத்துக்கொள்ளவும் எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறினார்.

இதன் மூலம் பொதுமக்கள் பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மேலும் சிவில் பாதுகாப்புப் படையின் வினைத்திறனை அதிகரிப்பதற்கு தேவையான வசதிகள், உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி, பயிற்சித் திட்டங்கள் மற்றும் மனித வள முகாமைத்துவம் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்படும் என அமைச்சர் வலியுறுத்தினார்.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now