New Updates! Fresh news just arrived.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிந்தவூர் விஜயத்தை சிறப...

News

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிந்தவூர் விஜயத்தை சிறப்பாக நடத்த தீர்மானம்!

May 21, 2026 4:53 pm
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் நிந்தவூர் விஜயத்தை சிறப்பாக நடத்த தீர்மானம்!
நாளை (22) நிந்தவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் வருகையை எவ்வித குறைகளுமின்றி சிறப்பாக நடத்த நிந்தவூர் பிரதேச சபை தீர்மானம் எடுத்துள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் 5ஆவது சபையின் 8ஆவது அமர்வு இன்று (21) வியாழக்கிழமை காலை 11.00 மணிக்கு சபை மண்டபத்தில் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது ஜனாதிபதியின் நிந்தவூர் விஜயத்தை மகிழ்வுடனும் சிறப்புடனும் முன்னெடுக்க வேண்டுமென தவிசாளர் முன்வைத்த கருத்தை சபை உறுப்பினர்கள் ஏற்றுக்கொண்டதுடன், மனக்குறைகளை நீக்கி வெற்றிகரமாக நிகழ்வை நடத்துவதற்கான ஒருமித்த முடிவும் எடுக்கப்பட்டது.

மேலும் பிரதேச அபிவிருத்தி தொடர்பான பல்வேறு விடயங்கள் குறித்து சபையில் கலந்துரையாடப்பட்டதுடன், உறுப்பினர்களின் முன்மொழிவுகளும் பரிசீலிக்கப்பட்டன. அமர்வின் நிகழ்ச்சி நிரலில் மத அனுஷ்டானம், ஏப்ரல் மாத கூட்டறிக்கை மற்றும் கணக்கறிக்கை உறுதிப்படுத்தல், மே மாத விசேட கூட்டறிக்கை உறுதிப்படுத்தல், தவிசாளரின் உரை உள்ளிட்ட விடயங்கள் இடம்பெற்றன.

அதேவேளை, உறுப்பினர்களான எஸ்.எம். ஷாபி, ஐ.எல்.எம். ஜாபிர், எம்.ஜே. ஜுவைரியா, கே.எம். ஜலீல், ஏ. இப்திகார், எம். சம்சுன் அலி மற்றும் எம்.ஏ.எம். றசீன் ஆகியோரின் முன்மொழிவுகளும் சபையில் எடுத்துரைக்கப்பட்டு மேலதிக நடவடிக்கைக்கு சபை தீர்மானம் நிறைவேற்றியது.

நூருல் ஹுதா உமர்
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now