ஆசிரியர் வெற்றிடங்களுக்கான எழுத்து மூலப் பரீட்சையின் பெறு...
News
ஆசிரியர் வெற்றிடங்களுக்கான எழுத்து மூலப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகின!
தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் காணப்படும் தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழி ஆசிரியர் வெற்றிடங்களுக்காக ஆசிரியர் சேவையின் 3-I(அ) தரத்திற்கு 23,006 பட்டதாரிகளை உள்வாங்கும் முதற்கட்ட நேர்முகப்பரீட்சைக்குத் தகுதிபெற்றோரின் பெயர்ப்பட்டியலை கல்வி அமைச்சு இன்று (14) வெளியிட்டுள்ளது.
அரசு சேவையிலுள்ள மற்றும் சேவையிலில்லாத பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு, பரீட்சைத் திணைக்களத்தினால் கடந்த மே 24 ஆம் திகதி நடாத்தப்பட்ட எழுத்து மூலப் பரீட்சையின் பெறுபேறுகள் இவ்வாறு வெளியிடப்பட்டுள்ளன.
அதற்கமைய முதற்கட்டத்தின் கீழ் நேர்முகப்பரீட்சைக்குத் தகுதிபெற்றுள்ள விண்ணப்பதாரர்களின் பெயர்ப்பட்டியல் இன்று முதல் கல்வி அமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி விண்ணப்பதாரர் தனது விண்ணப்பப் படிவத்தில் வசிப்பிட மாகாணமாகக் குறிப்பிட்ட மாகாணத்திற்குரிய கோப்பினை அமைச்சின் இணையத்தளத்திலுள்ள இணைப்பு (Web Link) ஊடாக அணுகி, தாம் விண்ணப்பித்த வர்த்தமானிப் பத்திரிகைக்கு அமைவாகப் பரீட்சைக்குத் தோற்றிய மொழிமூலத்தின் கீழ் வெளியிடப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலைப் பரிசீலித்துக் கொள்ள முடியும்.
அங்குத் தமது பரீட்சை இலக்கம் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தினை உள்ளீடு செய்வதன் மூலம் இக்கட்டத்தில் தாம் தகுதி பெற்றுள்ளனரா இல்லையா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.
தகுதிபெற்றோருக்கு வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களுக்கு அமைய, பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பல்கலைக்கழகங்களிலிருந்து ஏதேனும் ஆவணங்களைப் பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பின், 2026.10.20 ஆம் திகதிக்கு முன்னர் உரிய பல்கலைக்கழகங்களுக்கு அதற்காக விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும், குறித்த நேர்முகப்பரீட்சைகளை 2026 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் நடாத்துவதற்கு தற்போது திட்டமிடப்பட்டுள்ளது.
தகுதிபெற்றோரை நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கும் இடம், திகதி மற்றும் நேரம் உள்ளிட்ட உத்தியோகபூர்வ அழைப்புக் கடிதங்கள் எதிர்வரும் நாட்களில் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படவுள்ளன.
இது தவிர இம்மாத இறுதியில் கல்வி அமைச்சு மற்றும் உரிய மாகாண அரச சேவை ஆணைக்குழுக்கள் அல்லது மாகாண கல்வி அமைச்சின் இணையத்தளங்கள் மூலமும் நேர்முகப்பரீட்சை நடைபெறும் கால அட்டவணைகள் மற்றும் ஏனைய தகவல்கள் வெளியிடப்படும்.
• மேல் மாகாணம் = https://moe.gov.lk/en/western-province/
• மத்திய மாகாணம் = https://moe.gov.lk/en/central-province/
• தென் மாகாணம் = https://moe.gov.lk/en/southern-province/
• வட மாகாணம் = https://moe.gov.lk/en/northern-province/
• கிழக்கு மாகாணம் = https://moe.gov.lk/en/eastern-province/
• வடமேல் மாகாணம் = https://moe.gov.lk/en/north-western-province/
• வடமத்திய மாகாணம் = https://moe.gov.lk/en/north-central/
• ஊவா மாகாணம் = https://moe.gov.lk/en/uva-province/
• சப்ரகமுவ மாகாணம் = https://moe.gov.lk/en/sabaragamuwa-province/