New Updates! Fresh news just arrived.

திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் அதிவிசேட வர்த்தமா...

News

திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் அதிவிசேட வர்த்தமானி வெளியீடு!

January 10, 2026 11:22 pm
திருத்தப்பட்ட பயங்கரவாத பெயர் பட்டியல் அதிவிசேட  வர்த்தமானி வெளியீடு!
பாதுகாப்பு அமைச்சின் செயலாளரினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியை சேர்ந்த சுப்பர் முஸ்லிம் அமைப்பின் பெயரும் இடம்பெற்றுள்ளது.

2026 ஆண்டு ஜனவரி 06ஆம் திகதி வெளியிடப்பட்ட பயங்கரவாதத்துடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் அமைப்புகளின் திருத்தப்பட்ட பட்டியல் அடங்கிய அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

1968 ஆம் ஆண்டினுடைய 45 ஆம் இலக்க ஐக்கிய நாடுகள் சட்டத்தின் கீழ் பெயரிடப்பட்டுள்ள நபர்கள் குழுக்கள் மற்றும் அமைப்புகளினுடைய திருத்தப்பட்ட பட்டியல் அதிவிசேட வர்த்தமானி ஊடாக வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் 2021.04.13 ஜனாதிபதியாக இருந்த கோட்டபாய ராஜபக்ஷ 11 இஸ்லாமிய அமைப்புக்களினை தடை செய்வது வர்த்தமானி அறிவித்தல் ஒன்றினை வெளியிடப்பட்டிருந்தார்.

இதற்கமைய பின்வரும் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தன.

1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)

2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)

3. ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)

4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)

5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் - ஈ - அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா

6. தாறுல் அதர் என்னும் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாறுல் அதர் குரான் மத்ரச மறுபெயர் தாறுல் அதர்அத்தபாவிய்யா ஆகும்.

7. ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) என்னும் மறுபெயர் ஜம்இய்யா

8. ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS)என்னும் மறுபெயர் அல் - தௌலா அல் - இஸ்லாமியா தௌலா இஸ்லாமியா

9. அல்கய்தா அமைப்பூ

10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு என்னும் மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்

11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு

அத்துடன் மேற்குறிப்பிட்ட அமைப்புக்களின்

(அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது,

(ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது,

(இ) சீருடையை, உடையை மற்றும் சின்னத்தை, தனிக்குறியினை அல்லது கொடியினை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோ அல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது,

(ஈ) கூட்டமொன்றினை அழைத்தலோ, கூட்டுதலோ மற்றும் நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது,

(உ) உறுப்புருமையைப் பெறுதலோ அல்லது அதில் சேருதலோ ஆகாது,

(ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ அல்லது அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது,

(எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது,

(ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோஅல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது,


(ஐ) பணத்தினை அல்லது பொருட்களினை நன்கொடையளித்தலோ அல்லது உதவி தொகையளித்தலோ ஆகாது,

(ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களினை பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ அல்லது இடம்பெயர்த்தலோ, உடைமையில் வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது,

(ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது,

(ஒள) அது தொடர்பில் ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது,

(க) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது, என வர்த்தமானி அறிவித்தலில் வெளியாகி இருந்தந்தமையும் குறிப்பிடத்தக்கது.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now