உயர்ந்து வரும் கடல் அலைகள்: வளிமண்டலவியல் திணைக்களம் விட...
News
உயர்ந்து வரும் கடல் அலைகள்: வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை!
உயர்ந்து வரும் கடல் அலைகளின் உயரம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கொழும்பு முதல் காலி வரையிலும், மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் கடல் அலைகள் உயரக்கூடும் என்று குறித்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி, 2 முதல் 3 மீட்டர் வரை அலைகள் உயர வாய்ப்புள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பெருவளை முதல் காலி மற்றும் மாத்தறை வரையிலான பகுதிகளில் அலைகள் நிலப்பரப்பை அடைய வாய்ப்புள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த கடற்பகுதிகளில் உள்ள மீன்பிடி மற்றும் கடலோர சமூகத்தினரும், கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களும் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தனது அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளது.