New Updates! Fresh news just arrived.

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம்: ஆசிய பங்க...

News

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம்: ஆசிய பங்குச் சந்தை சரிவு - எரிபொருள் விலை உயர்வு!

March 4, 2026 2:16 pm
மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் போர் பதற்றம்: ஆசிய பங்குச் சந்தை சரிவு - எரிபொருள் விலை உயர்வு!
இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களின் பின்னணியில் ஆசிய பங்குச் சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் சரிந்துள்ளமையால் எரிபொருள் விலைகளும் உயர்ந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தென் கொரியாவின் கோஸ்பி (Kospi) சந்தை ஆரம்பத்தில் 7% சரிவினை சந்தித்த நிலையில் தற்போது 6% சரிவில் உள்ளது.

ஜப்பானின் நிக்கேய் 225 (Nikkei 225) பங்குச் சந்தையானது 3.6% வீழ்ச்சியடைந்துதுள்ளதோடு, அவுஸ்திரேலியாவின் ஏஎஸ்எக்ஸ் 200 (ASX 200) 1.8% சரிந்துள்ளதுடன், ஹொங்கொங்கின் ஹாங் செங் (Hang Seng) சந்தையும் சரிவினை சந்தித்துள்ளது.

மேலும் ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல் போக்குவரத்தானது சீராக இருந்தபோதிலும், இன்று காலை நிலவரப்படி அமெரிக்க கச்சா எண்ணெய் மற்றும் ப்ரெண்ட் கச்சா எண்ணெய் விலைகளானது 1.2% உயர்ந்துள்ளன.
Written by Guru TV

Latest News

Follow Us

Stay updated with our latest news!

Download GuruTV App

Get the best news experience with our official mobile app.

Install Now